/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பம் பகுதிகளில் தடையை மீறி இறைச்சி விற்பனை
/
நெல்லிக்குப்பம் பகுதிகளில் தடையை மீறி இறைச்சி விற்பனை
நெல்லிக்குப்பம் பகுதிகளில் தடையை மீறி இறைச்சி விற்பனை
நெல்லிக்குப்பம் பகுதிகளில் தடையை மீறி இறைச்சி விற்பனை
ADDED : ஜன 26, 2024 12:14 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பகுதியில் தைப்பூச தினமான நேற்று தடையை மீறி இறைச்சி விற்பனை அமோகமாக நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. அதேபோன்று, இறைச்சி விற்பனைக்கும் அரசு தடை விதித்தது.
அந்த வகையில், நெல்லிக்குப்பம் நகராட்சி மற்றும் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அதிகாரிகள், இறைச்சி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர். அத்துடன் அவர்கள் பணி முடிந்ததாக நினைத்ததால், அதிகாரிகள் உத்தரவை யாரும் மதிக்கவில்லை.
இதனால், நேற்று பெரும்பாலான கோழி, ஆடு இறைச்சி கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன.
கடைகளை பெயரளவுக்கு மூடியிருப்பது போல் வைத்து விற்பனை செய்தனர்.
இது, வள்ளலார் வழியை பின்பற்றும் சன்மார்க்க அன்பர்கள் மனதை பெரிதும் புன்படுத்தும் வகையில் அமைந்தது.