/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணல் திருட்டு, மது விற்பனை: புவனகிரி அருகே 4 பேருக்கு வலை
/
மணல் திருட்டு, மது விற்பனை: புவனகிரி அருகே 4 பேருக்கு வலை
மணல் திருட்டு, மது விற்பனை: புவனகிரி அருகே 4 பேருக்கு வலை
மணல் திருட்டு, மது விற்பனை: புவனகிரி அருகே 4 பேருக்கு வலை
ADDED : ஜன 27, 2024 06:18 AM
புவனகிரி : புவனகிரி அருகே மணல் திருட்டு மற்றும் மது பாட்டில் விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
புவனகிரி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கீரப்பாளையம் முருகன் கோவில் தெருவில் 2 பேர், பைக்கில் கடத்திச் சென்று மணல் விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது.
போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது,8 மணல் மூட்டைகள் மற்றும் பைக்கை போட்டு விட்டு தப்பியோடினர்.
விசாரணையில், மணல் கடத்தியது கீரப்பாளையம் இளஞ்செழியன் மற்றும் அசோக் என தெரியவந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும், புவனகிரி பங்களா அருகே மேல்புவனகிரி அண்ணா நகர் நடராஜன், கீரப்பாளையம் அம்சாயால் ஆகிய இருவரும் மது பாட்டில் விற்றது தெரியவந்தது. போலீசை பார்த்ததும் இருவரும் தப்பியோடினர்.
போலீசார், 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.