ADDED : ஜன 26, 2024 12:13 AM
கடலுார் : சிதம்பரத்தில் வரும் 27ம் தேதி, சிறுதானிய உணவு திருவிழா நடக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அதையொட்டி, பொதுமக்களிடையே பாரம்பரிய உணவாகிய சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவு திருவிழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் சிறுதானிய உணவு திருவிழா வரும் 27ம் தேதி சிதம்பரம் ஜி.எம்.வாண்டையாளர் திருமண மண்டபத்தில் நடத்தப்படுகிறது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலை வகிக்கிறார். உணவு திருவிழாவில் சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சி மற்றும் பல்வேறு அரசுத் துறைகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்கின்றன.
பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என, கலெக்டர் அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

