/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு வள்ளலார் ஞானாலயத்தில் தைபூச விழா
/
நடுவீரப்பட்டு வள்ளலார் ஞானாலயத்தில் தைபூச விழா
ADDED : ஜன 26, 2024 12:17 AM

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு வள்ளலார் ஞானாலயத்தில் தைபூச பெருவிழா நடந்தது.
நடுவீரப்பட்டு சஞ்சிவீராயன் கோவிலில் வள்ளலார் ஞானாலயம் உள்ளது. இங்கு, நேற்று தைபூசத்தை முன்னிட்டு காலை 7:00 மணி, 10:00 மணி, மதியம்1:00 மணி, இரவு 7:00 மணிக்கு வள்ளலாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் கலந்து கொண்டவர்களை ம.தி.மு.க.,மாவட்ட செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார்.
ஞானாலயத்தில் காலை முதல் மாலை வரை தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர் அசோசியேஷன் மாநிலத்தலைவர் செல்வமுத்துக்குமரன் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை நிறுவனர் கணேஷ், ராதிகா கணேஷ், ஆறுமுகம், ராஜூ, பக்கிரிசாமி, தனசேகர், பாலா, விக்ரமன் செய்திருந்தனர்.

