/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருக்கண்டேஸ்வரத்தில் தைப்பூச விழா
/
திருக்கண்டேஸ்வரத்தில் தைப்பூச விழா
ADDED : ஜன 26, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய யோகசாலையில் தைப்பூசம், வள்ளலார் சித்தி தினவிழா, யோகசாலை துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
மாணவர்களின் அகவல் பாராயணம் நடந்தது. சீனுவாசன் சன்மார்க்க கொடியேற்றினார்.
நிறுவனர் சாது சிவராமனார் 'மனிதர்களின் குணங்கள் மூன்று' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மாணவர்களுக்கு யோகா, பேச்சு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. விழாவில் மூலிகை கண்காட்சி நடந்தது.

