ADDED : ஜன 17, 2024 08:41 AM
போலீஸ் நிலையம் என்றாலே, பொதுமக்களுக்கு ஒருவித தயக்கம் இருக்கும்.
ஆனால், சமீபத்தில் போதை தலைக்கேறிய ஆசாமி ஒருவர், கடலுார் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அரை நிர்வாணத்துடன் போலீஸ் நிலைய ஜீப் முன்பு படுத்துக்கொண்டு எழுந்திருக்க மாட்டேன் என, அடம் பிடித்துள்ளார். அவரை அப்புறப்படுத்த, பெண் போலீஸ் உட்பட 4 போலீசார், கடுமையாக போராடினர். அப்போது, 'என் மீது கைவைத்துப்பார்' என, அந்த போதை ஆசாமி வீர வசனம் பேசிக்கொண்டிருந்தார். போதையில் இருப்பவரை ஒன்றும் செய்ய முடியாமல், அவரது மனைவியின் தொலைபேசி எண்ணில் பேசி வரவழைத்தனர். மனைவியுடன் பத்திரமாக போதை ஆசாமியை அனுப்பி வைத்த பிறகே போலீசார் நிம்மதி அடைந்தனர். இது குறித்து புதுநகர் போலீசார் கூறுகையில், இதுபோன்ற போதை ஆசாமிகளிடம், வாரத்தில் 3, 4 நாட்கள் நாங்கள் படாத பாடு பட வேண்டியிருப்பதாக புலம்பி தீர்த்தனர்.

