/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இல்லாத சாக்கடைக்கு வரி கடலுார் மக்கள் அதிர்ச்சி
/
இல்லாத சாக்கடைக்கு வரி கடலுார் மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜன 10, 2024 12:11 AM
தமிழகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் சொத்துகள், குடிநீர், பாதாள சாக்கடைக்கு வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், இல்லாத பாதாள சாக்கடைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் மாநகராட்சி நோட்டீஸ் வழங்கிய சம்பவம் கடலுார் மாநகராட்சியில் அரங்கேறியுள்ளது.
கடலுார் நகராட்சி 1866ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது, 1993ல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2008 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும், 2021ம் ஆண்டு அக்டோபரில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, 45 வார்டுகள் உள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் தற்போது, சம்பந்தப்பட்டவர்களிடம் நோட்டீஸ் வழங்கி வரி வசூலிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது. புதுப்பாளையம் 22 வது வார்டு ராமசாமி சந்தில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசில் பாதாள சாக்கடை கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இப்பகுதியில் பாதாள சாக்கடையே இல்லாத நிலையில், கட்டணம் செலுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இங்கு பாதாள சாக்கடை திட்டம் துவங்க ஆரம்ப கட்ட பணிகள் நடந்தது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை பணிகள் கிடப்பில் உள்ளது. மீண்டும் பணி துவங்கவில்லை. பாதாள சாக்கடை இல்லாத நிலையில், கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மாநகராட்சியின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது' என்றனர்.

