நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : ராமநத்தம் அருகே கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநத்தம் அடுத்த ஆலம் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் ஒலிம்பிக் சுடர், 20; கல்லுாரி மாணவி.
தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 25ம் தேதி இரவு முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிகின்றனர்.