/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆபத்தான தரைப்பாலத்தால் 'திக்.. திக்.. திக்..'
/
ஆபத்தான தரைப்பாலத்தால் 'திக்.. திக்.. திக்..'
ADDED : ஜன 10, 2024 12:34 AM

பரங்கிப்பேட்டை அடுத்த கே.பஞ்சங்குப்பம் மெயின்ரோட்டில் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே, 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது.
இப்பாலத்தை கே.பஞ்சங்குப்பம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னுார், வேளங்கிராயன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தரைப்பாலம் பராமரிப்பின்றி ஏற்கனவே தடுப்புக்கட்டைகள் உடைந்துள்ள நிலையில், பாலத்தை தாங்கும் துாண்கள் சேதமாகியுள்ளது. சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, கான்கீரிட் கம்பிகள் வெளியில் தெரிகிறது. பாலம் பலவீனமடைந்துள்ளதால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலத்தை தாங்கி பிடிக்க, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இருந்தும், தரைப்பாலத்தை பொதுமக்கள், வேறு வழியில்லாமல் அச்சத்துடன் கடந்துவருகின்றனர். எனவே, இனியும் அரசு அலட்சியம் காட்டாமல், பாலத்தை இடித்துவிட்டு, புதியதாக கட்ட நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

