ADDED : ஜன 26, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடலுார் முதுநகர் ரோப் தெருவைச் சேர்ந்த கஸ்பா மகன் தியோப்ராஜா, 32; இன்ஜினியரிங் பட்டதாரி. இவரது மனைவி ஹேமாகிருஷ்டி 30; திருமணமாகி ஒன்னரை ஆண்டுகள் ஆகிறது. 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பண்ருட்டி அண்ணா பல்கலைக் கழகத்தில், தியோப்ராஜா, பி,எச்.டி., படித்து வந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கணவன் மனைவியிடையே ஏற்பட்ட பிரச்னையில் கோபித்துக்கொண்டு வெளியில் சென்ற தியோப்ராஜாவை காணவில்லை. இது குறித்து மனைவி ஹேமாகிருஷ்டி கொடுத்த புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

