நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர்,மொரப்பூர் கிழக்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில், சிந்துார் ராணுவ தாக்குதல் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், இந்திய படைக்கு நன்றி தெரிவித்தும், நேற்று மொரப்பூரில், மூவர்ணக்கொடி வெற்றி ஊர்வலம் நடந்தது. கிழக்கு மண்டல தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மொரப்பூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை, முன்னாள் ராணுவ வீரர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஊர்வலம், மீண்டும் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. நிர்வாகிகள் சாட்சாதிபதி, லெனின், சக்திவேல், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.