/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
100 நாள் வேலை கேட்டு பெண்கள் முற்றுகை
/
100 நாள் வேலை கேட்டு பெண்கள் முற்றுகை
ADDED : மே 27, 2025 02:08 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், மொத்தம், 251 பஞ்.,கள் உள்ளன. பஞ்.,களில், 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், திங்கட்கிழமையில் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் நாள் கூட்டத்தில், 100 நாள் வேலை வழங்கக்கோரி, கலெக்டரிம் மனு அளிக்க, தொடர்ந்து பெண்கள் வருகின்றனர்.
இந்நிலையில் ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., பகுதியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில், கலெக்டர் சதீஸ்யிடம், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க கோரி மனு அளித்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறுகையில், 'கடந்த, 4 மாதங்களாக, 100 நாள் வேலை திட்டத்தில் எங்களுக்கு பணி வழங்கவில்லை. இதனால் எங்களுக்கு பிழைப்பதற்கு வேறு எந்த வாழ்வாதாரமும் இல்லை. எனவே, எங்களுக்கு பணி வழங்க வேண்டும்' என்றனர்.