/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விதிமீறல் பயணங்களால் காத்திருக்கு பேராபத்து
/
விதிமீறல் பயணங்களால் காத்திருக்கு பேராபத்து
ADDED : ஜூலை 05, 2024 06:00 AM

திறக்கப்படாத கழிப்பறை
ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் வெளியே அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பறை கட்டப்பட்டதிலிருந்து திறக்கப்படாமல் உள்ளது.இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேகர், ஒட்டன்சத்திரம்.
............------சுரங்கப்பாதையில் விபத்து
குளத்துார் லட்சுமணபுரத்திலிருந்து தாடிக்கொம்பு செல்லும் ரோட்டில் ரயில்வே சுரங்க ப்பாதைக்குள் சிமென்ட் தளம் சிதைந்துள்ளதால் டூவீலர்கள் தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். - ராமசந்திரன், வடமதுரை.
..........------
விளக்குகள் எரியாது இருள்
நத்தம் சேர்வீடு பகுதியில் உள்ள நத்தம் -திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இரவில் மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து வாகன விபத்திற்கு வழிவகுக்கிறது. மின் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விஜய், வேலம்பட்டி.
...........-------ஓடையை ஆக்கிரமித்து கட்டடம்
ஆத்துார் தாலுகா அய்யம்பாளையம் - சித்ரேவு ரோட்டில் பூசாரி ஓடையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தனியர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிகண்டன், அய்யம்பாளையம்.
.....................------
தொடரும் விதிமீறல்கள்
திண்டுக்கல்லில் பிளக்ஸ் போர்டு கட்டும் பிரேம்களை வாகனத்தில் ஏற்றி ரோட்டை மறைத்து கொண்டு செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. யார் மீதும் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளதால் தடுக்க நடவடிக்கை வேண்டும். மோகன், திண்டுக்கல்.
.............------
குப்பையால் சுகாதாரக்கேடு
திண்டுக்கல் பிள்ளையார்பாளையம் காமராஜர் பள்ளி அருகே குப்பை கொட்டி மலைபோல் குவித்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை சிதறி கிடப்பதால் கடந்து செல்வோருக்கு தொற்றுநோய் அபாயம் உள்ளது . பவித்ரா, திண்டுக்கல்.
.........------சாக்கடையில் அடைப்பு
திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது . வியாபாரிகள், குடியிருப்பு மக்கள் பாதிக்கின்றனர் .கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் கனகராஜ், நாகல்நகர்.
.......------