/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வகுப்பு புறக்கணிப்பு, முற்றுகை போராட்டம் கள்ளர் பள்ளி பாதுகாப்பு குழு எச்சரிக்கை
/
வகுப்பு புறக்கணிப்பு, முற்றுகை போராட்டம் கள்ளர் பள்ளி பாதுகாப்பு குழு எச்சரிக்கை
வகுப்பு புறக்கணிப்பு, முற்றுகை போராட்டம் கள்ளர் பள்ளி பாதுகாப்பு குழு எச்சரிக்கை
வகுப்பு புறக்கணிப்பு, முற்றுகை போராட்டம் கள்ளர் பள்ளி பாதுகாப்பு குழு எச்சரிக்கை
ADDED : ஜூலை 06, 2024 02:40 AM
நிலக்கோட்டை:''கள்ளர் சீரமைப்பு ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையோடு இணைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து வகுப்பு புறக்கணிப்புடன் மதுரை, திண்டுக்கல் ,தேனி மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் ''என கள்ளர் பள்ளி பாதுகாப்பு குழு கூட்டத்தில் பேசிய அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் கூறினார்.
கள்ளர் சீரமைப்பு ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையோடு இணைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து நிலக்கோட்டை அணைப்பட்டியில் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் நடந்த கள்ளர் பள்ளி பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அரசு கள்ளர் சீரமைப்பு ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவில் தமிழக முதல்வர் தலையிட்டு சிறந்ததோர் முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் ஜூலை 12ல் மதுரை மாவட்ட கள்ளர் சீரமைப்பு துறை அலுவலக முற்றுகை, உசிலம்பட்டியில் ஒரு நபர் கமிஷன் நீதிபதி சந்துரு அறிக்கையை தீயிட்டு எரித்து போராட்டம், மாணவர்களோடு பெற்றோர்களும் இணைந்து அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் வகுப்பு புறக்கணிப்புடன் ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்த உள்ளோம்.
அரசாணை 40ஐ நீக்கிட வழிவகை செய்யவில்லை என்றால் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடக்கும் என்றார்.
அனைத்து கள்ளர் கூட்டமைப்பு நிறுவனர் தியாகராஜன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாவட்ட தலைவர் விஜயகாந்த், பெருங்காமநல்லுார் மாயக்காள் தியாகி அமைப்பு நிர்வாகி செல்வ பிரித்தா, 58 கிராம பாசன கால்வாய் சங்க தலைவர் இரும்புத் துரை, நேதாஜி பரஸ்பர அமைப்பு நிர்வாகி சிவா, அமைப்புச் செயலாளர் முருகன், பொருளாளர் இளங்கோ பங்கேற்றனர்.