/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிவீதியில் 28 இடங்களில் குடிநீர்
/
கிரிவீதியில் 28 இடங்களில் குடிநீர்
ADDED : ஜூன் 15, 2024 06:38 AM
பழநி,: பழநி கிரிவீதியில் பக்தர்களின் வசதிக்கென சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி துவங்கி வைக்கப்பட்டது.
பழநி கிரி விதியில் நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து கோயில் சார்பில் பக்தர்களுக்கு பேட்டரி கார், பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருப்பு பகுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதோடு பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வழங்கும் வகையில் ரூ.ஒன்பது லட்சம் மதிப்பீட்டில் பாத விநாயகர் கோயில் ,வீரதுர்க்கை அம்மன் கோயில், விச் ஸ்டேஷன் என 28 இடங்களில் 56 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதை நேற்று காலை கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்ய பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.