/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முன்னறிவிப்பற்ற மின்தடை செம்பட்டி பகுதியில் தண்ணீர் வழங்கல் முடக்கம்
/
முன்னறிவிப்பற்ற மின்தடை செம்பட்டி பகுதியில் தண்ணீர் வழங்கல் முடக்கம்
முன்னறிவிப்பற்ற மின்தடை செம்பட்டி பகுதியில் தண்ணீர் வழங்கல் முடக்கம்
முன்னறிவிப்பற்ற மின்தடை செம்பட்டி பகுதியில் தண்ணீர் வழங்கல் முடக்கம்
ADDED : ஜூலை 28, 2024 07:08 AM
செம்பட்டி : செம்பட்டி பகுதியில் தொடர்ந்து பல மணிநேர முன்னறிவிப்பற்ற மின்தடை அமல்படுத்தப்படுவதால் அத்தியாவசிய பணிகள் முடங்கி கிடக்கிறது.
ஆத்தூர், சித்தையன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி, மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி, வீரக்கல், வண்ணம்பட்டி, மேட்டுப்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி, கோனுார், வெல்லம்பட்டி, கசவனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முன்னறிவிப்பற்ற மின்தடை தொடர்கிறது. சில நிமிடங்கள் இடைவெளியில் தொடர்ந்து பல மணிநேரம் நிறுத்தப்படுகிறது.இருமுனை மின்வினியோகத்தை மும்முனையாக மாற்றும் நேரங்களில், 3 முறைக்கு மேல் அடுத்தடுத்து குறைந்தழுத்த வினியோகம் வழக்கமாகி விட்டது.
பெரும்பாலான கிராமங்களில் வீட்டு உபயோக பொருட்கள் பழுதடையும் நிலை அதிகரித்து வருகிறது. முன்னறிவிப்பின்றி பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அடிக்கடி வெகுநேர மின்தடை ஏற்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் தண்ணீர் வினியோகம் முடங்கும் அவலம் தொடர்கிறது. கணினி சார்ந்த அரசு, தனியார் நிர்வாக பணிகள், வணிக நிறுவனங்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன. மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் நீடிக்கும் அவதிக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.