/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ் ஓட்டும்போது டிரைவருக்கு நெஞ்சுவலி
/
பஸ் ஓட்டும்போது டிரைவருக்கு நெஞ்சுவலி
ADDED : அக் 04, 2025 04:04 AM
செம்பட்டி: வத்தலக்குண்டில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பஸ் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட சித்தையன்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
வத்தலக்குண்டில் இருந்து சித்தையன்கோட்டை வழியே திண்டுக்கல் சென்ற அரசு பஸ்சை டிரைவர் பாலகுரு 45, ஓட்டி வந்தார். அய்யம்பாளையம் அடுத்த அழகர்நாயக்கன்பட்டி வரும்போது டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
சுதாரித்த டிரைவர அருகில் இருந்த சித்தையன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பஸ்சை நிறுத்தினார்.அங்கு முதலுதவிபின் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு டிரைவர் பக்ருதீன் செம்பட்டி வரை பஸ்சை ஓட்டி வந்தார். அவ்வழியே வந்த மற்றொரு பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

