ADDED : அக் 04, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. திண்டுக்கல் கட்சி அலுவலகத்தில் நடந்த இதற்கு மேற்கு மாவட்ட அவைத் தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர் சிவகுருசாமி தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ., செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.கட்சித் துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் பெரியசாமி பேசினார்.
அக். 8ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதிக்கு அய்யலூரில் வரவேற்பது, மாலையில் திண்டுக்கல் சட்டசபை தொகுதி நிர்வாகிகளை தனியார் மண்டபத்தில் சந்திப்பது, 9ம் தேதி வேடசந்துார் திருமண நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

