/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் ஆபத்து பள்ளம் நிறைந்த ரோடு: நிதியில்லை என கை விரிக்கிறது நெடுஞ்சாலைத்துறை
/
'கொடை'யில் ஆபத்து பள்ளம் நிறைந்த ரோடு: நிதியில்லை என கை விரிக்கிறது நெடுஞ்சாலைத்துறை
'கொடை'யில் ஆபத்து பள்ளம் நிறைந்த ரோடு: நிதியில்லை என கை விரிக்கிறது நெடுஞ்சாலைத்துறை
'கொடை'யில் ஆபத்து பள்ளம் நிறைந்த ரோடு: நிதியில்லை என கை விரிக்கிறது நெடுஞ்சாலைத்துறை
ADDED : செப் 16, 2025 04:44 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங் களுக்கு செல்லும் ரோடில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு பயணிகள் விபத்து அபாயத்தில் சென்று வரு கின்றனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமானோர் வருகின்றனர்.
கலையரங்கம் முதல் அப்சர்வேட்டரி இடையே தாழ்வான ரோட்டில் மழை தண்ணீர், ஊற்று நீர் செல்ல வழி இல்லாமல் ரோட்டில் பெருக் கெடுத்து 1 கி.மீ., துாரம் ரோடு அரிக்கப்பட்டுள் ளது.
இதை கடந்தே ரோஜா பூங்கா, வானியியற்பியல் மையம், வனச் சுற்றுலா தலம்,பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், கூக்கால் ஏரி, மத்திய அரசின் ரோம ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், 20க்கு மேற்பட்ட மேல்மலைகிராமங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்த ரோட்டில் மழை நீர், ஊற்று நீர் வடிந்தோட வடிகால் அமைப்புகள் முறையாக ஏற்படுத்தாத நிலையில் ரோடு அமைத்த சில மாதங்களிலே சேத மடைவது வாடிக்கையாக உள்ளது.
அவ்வப்போது பேட்ஜ் வொர்க் (தற்காலிக சீரமைப்பு) செய்தும் பலனின்றி கனமழையால் அரித்து மேலும் பள்ளங்கள் அதிகரிக்கின்றன.
கனமழையால் 1.கி. மீ., அளவிற்கு ரோட்டின் நடுவே ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டன.
நெடுஞ்சாலைத்துறை ரோட்டை சீரமைக்காததால் நாள்தோறும் வாகனங்கள் பழுதாகியும், விபத்தில் சிக்குகின்றன. இப்பகுதியை கடந்து செல்ல தாமதமாவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கன மழை பெய்யும் போது ரோடு அரித்து செல்லப் படுகிறது.
ரோடை புதுப்பிக்க தற்போது நிதி இல்லாத நிலையில் தற்காலிகமாக சீரமைக்கும் நடவடிக்கையே தொடரும் ''என்றார்.