/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாசன மின் மோட்டார் பழுதுக்கு மானியம் எதிர்பார்ப்பு : அரசே குறைந்த செலவில் சரி செய்யலாமே

ADDED : ஜூன் 13, 2025 02:57 AM

குஜிலியம்பாறை: வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளின் நலன் கருதி ஒன்றிய வாரியாக உழவு டிராக்டர், மண் அள்ளும் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு விடுவது போல் விவசாயிகளுக்கான பாசன மின் மோட்டார் பழுதடைந்தால் அதை சரி செய்ய மானியம் வழங்குவதோடு அரசே குறைந்த செலவில் சரி செய்து கொடுக்க முன் வர வேண்டும்.
தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி வேளாண்துறை, பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு சலுகைகளை, மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதில் ஒன்றுதான் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு தேவையான உழவு டிராக்டர், மரம் நடுவதற்கான குழி போடும் கருவி, மண் அள்ளும் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு விடுகின்றனர். இதனால் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இலவச மின்சாரம் காரணமாக இரண்டு, மூன்று போர்வெல்களை தோட்டங்களில் அமைத்து மின் மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
இந்த மின் மோட்டார்கள் கூடுதல் மின்அழுத்தத்தால் அடிக்கடி பழுதடைதல் போன்ற காரணங்களால் போர்வெல்லில் இருந்து மின் மோட்டாரை மேலே ஏற்றி காயில் கட்டுவது, மீண்டும் பொருத்துவது என ரூ.10 ஆயிரம் வரை செலவிற்கு ஆளாகின்றனர்.
இதை கருதி போர்வெல் மின் மோட்டார்கள் பழுதடையும் போது அவற்றை கழற்றி மீண்டும் பொருத்தும் வகையில் அதற்கான செலவு தொகைக்கு மானியம் வழங்கலாம். இல்லையேல் ஒரு ஒன்றியத்திற்கு குறைந்தது ஐந்து இடங்களில் அரசே குறைந்த கட்டணத்தில் பழுதை சரி செய்ய முன் வர வேண்டும்.