ADDED : ஜூன் 13, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: நாகையகோட்டை ஒத்தக்கடையை சேர்ந்தவர் விஜயராகவன் 30. எரியோடு ஒத்தக்கடை நோக்கி டூவீலரில் சென்றபோது விபத்தில் இறந்தார்.
வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த அவரது நண்பர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். ஒருவர் மருத்துவமனை கண்ணாடியை உடைத்தார். காரில் ஏறி சென்ற அவர்கள் அய்யனார் கோயில் அருகே அந்த வழியாக சென்றவர்களை மட்டையால் தாக்கினர்.
எல்லை பாறைப்பட்டி சூர்யா 22, கண்ணன் 24, ரஞ்சித் குமார் 24, கணேசன் 26, சக்திவேல் 23, என்பது தெரிந்தது. ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.