கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு
வத்தலக்குண்டு : கட்டக்காமன்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா 70. ஆடுகளுக்கு இரை பறிப்பதற்கு தோட்டத்திற்கு சென்றவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
நீச்சல் தெரிந்தவர் என்பதால் கிணற்றில் கல்லை பிடித்து கூச்சலிட்டார். வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
கஞ்சா கடத்தியவர் கைது
திண்டுக்கல் : மும்பையில் இருந்து நாகர்கோவில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே எஸ்.ஐ., பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சோதனையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரபட்டியை சேர்ந்த ராமஜெயம் 20, பேக்கில் 1.400 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
ஆட்டோ கவிழ்ந்து காயம்
நத்தம் : கும்பச்சாலையை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி 30. ஆட்டோவில் அதே ஊரை சேர்ந்த தங்கம் 32, அர்ஜூனன் 40, உடன் நேற்று மாலை கும்பச் சாலைக்கு சென்றார். விரிச்சலாறு பாலம் பகுதியில் சென்ற போது ரோட்டில் கவிழ்ந்தது ஆட்டோ டிரைவர் வெள்ளைச்சாமி , தங்கம் காயமடைந்தனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல் : நல்லாம்பட்டி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ் 42. மனைவி, 3 மகன்கள் உள்ளனர். வருமானம் பற்றாக்குறையால் மகன்களை படிக்க வைக்க முடியவில்லை என வருந்தி உள்ளார். வீடு கட்டுவதற்கு வாங்கிய லோனையும் கட்ட முடியவில்லை. மனமுடைந்த சுரேஷ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். திண்டுக்கல் எஸ்.ஐ., அங்கமுத்து விசாரித்தார்.
குளத்தில் மூழ்கி மாணவர் பலி
அம்பிளிக்கை: செரியன் நகரை சேர்ந்தவர் அன்பரசன் 16. இங்குள்ள சாந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். நண்பர்களுடன் அருகில் இருந்த குளத்தில் குளிக்க சென்ற பொழுது நீரில் மூழ்கி இறந்தார். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி மோதி விவசாயி பலி
குஜிலியம்பாறை : பாளையம் காட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி நாகராஜ் 55. அப்பகுதியில் டூவீலரில் சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியதில் நாகராஜ் இறந்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.