ADDED : ஜன 08, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு : திண்டுக்கல் கரூர் ரோடு ராஜகாளியம்மன் நகரை சேர்ந்தவர் விவசாயி முனிசாமி 67.
இவர் சாலையூர் என்.எஸ்., நகரிலிருந்து டூவீலரில் சென்றபோது அதே ரோட்டில் வந்த அனுமந்த நகரை சேர்ந்த தனுஷ்,என்பவர் ஒட்டி வந்த டூவீலர் இவர்மீது மோதி இருவரும் காயம் அடைந்தனர். செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த மாணிக்கம்62, திருச்சி மதுரை பைபாஸ் ரோட்டில் ராஜகாபட்டி பிரிவு அருகே நடந்து சென்றார். அப்போது சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் ஒட்டி வந்த டூவீலர் மோதி மாணிக்கம் காயமடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

