/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீர்த்தேக்க பகுதியில் வண்டல் எடுக்க தடை
/
நீர்த்தேக்க பகுதியில் வண்டல் எடுக்க தடை
ADDED : ஜூலை 24, 2024 12:40 AM
பு.புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள் உரிய அனுமதி பெற்று, லாரிகள் மற்றும் டிராக்டரில் எடுத்துச் சென்றனர். கடந்த சில நாட்களாக அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழையால், நீர்-வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம், 84.84 அடியாக உயர்ந்துள்-ளது.
அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அணை நீர்த்தேக்கப் பகுதியில், நேற்று முதல் வண்டல் மண் எடுக்க தடை விதித்து, பவானிசாகர் அணை நீர்ப்பரப்பு பிரிவு நீர்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நீர்வரத்து சரிந்தது
பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்ப-குதியில், தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியதால், நீர்வ-ரத்து அதிகரித்து அணை நீர்மட்டம், 84 அடியாக உயர்ந்தது. தற்-போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்தது.நேற்று முன்தினம், 5,917 கன அடியாக இருந்த நீர்வரத்து, 2,872 கன அடியாக நேற்று குறைந்தது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 84.80 அடி, நீர் இருப்பு, 18.3 டி.எம்.சி.,யாக இருந்-தது.