ADDED : ஆக 10, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தின், 16ம் ஆண்டு
பொதுக்குழு கூட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள்
குறித்த விளக்க கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு
ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள்
பயன்படுத்தும் வண்டிகள் உட்பட அனைத்து சாதனங்களுக்கும்
ஜி.எஸ்.டி.,யில் வரி விலக்கு அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள்
நலத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நகர்ப்புற வாழ்விட
மேம்பாட்டு வாரியத்தில் கட்டப்படும் அடுக்குமாடி
குடியிருப்புகளில் உள்ள வீடுகள் இலவசமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்
என்பது உட்பட, 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
