ADDED : ஆக 10, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்:திருப்பூரில்
பா.ஜ. சார்பில், 19 இடங்களில் தேசியக் கொடி ஊர்வலம் நடந்தது. பா.ஜ.
திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், சுதந்திர தினத்தை கொண்டாடும்
விதமாக மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் திருப்பூர் வடக்கு
மாவட்டத்துக்கு உட்பட்ட, 19 மண்டலத்தில் தேசிய கொடி ஊர்வலம் நேற்று
நடந்தது.
அதன் ஒரு பகுதியாக, செரங்காடு மண்டலம் சார்பில்,
விஸ்வேஸ்வரர் கோவில் அருகில் துவங்கிய ஊர்வலம், கோட்டை மாரியம்மன்
கோவிலில் நிறைவு பெற்றது. மண்டல தலைவர் மந்திராசலமூர்த்தி
தலைமையில், பொது செயலாளர் அருண், மாவட்ட செயலாளர் கார்த்திக், ஓ.பி.சி.
மாநில செயற்குழு உறுப்பினர் அய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்
சிவக்குமார் மற்றும் ஓசை சிவா, மாவட்ட மண்டல அணி பிரிவு நிர்வாகிகள்
உட்பட பலர் பங்கேற்றனர்.
