/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இயந்திரத்தில் கை சிக்கி பெண் தொழிலாளி பலி
/
இயந்திரத்தில் கை சிக்கி பெண் தொழிலாளி பலி
ADDED : ஜூலை 14, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில், ஸ்ரீராம்நகரை சேர்ந்தவர் வீரம்மாள், 64; வெள்-ளகோவிலில், வள்ளியரச்சல் சாலையில் உள்ள நுால் மில்லில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தொழிலாளியாக வேலை செய்தார்.
நேற்று முன்தினம் மதியம் பஞ்சு அரைக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, பஞ்சை எடுத்தபோது இயந்திரத்தில் இடது கை சிக்கிவிட்டது. அப்போது தவறி விழுந்-ததில் தலையில் படுகாயம் அடைந்தார். காங்கேயம் அரசு மருத்து-வமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். வெள்ள-கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.