/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பர்கூர் வனப்பகுதியில் சாலையை வழிமறித்த ஆண் யானை
/
பர்கூர் வனப்பகுதியில் சாலையை வழிமறித்த ஆண் யானை
ADDED : ஜூலை 17, 2024 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:பர்கூர் மலைச்சாலையில், ஒற்றை யானை நடமாட்டத்தால் போக்குவரத்து பாதித்தது.
அந்தியூரை அடுத்த பர்கூர்மலை வனப்பகுதியில், யானை, சிறுத்தை, கரடி, புலி, மான் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. தாமரைக்கரையில் இருந்து மடம் செல்லும் வனச்சாலையில், நேற்று மதியம் ஒற்றை ஆண் யானை வந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலையில் நின்றபடி அங்குமிங்கும் சென்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றன. வனப்பகுதிக்குள் யானை சென்ற பிறகே, டூவீலர் உள்ளிட்ட பிற வாகன ஓட்டிகள் பயணத்தை தொடர்ந்தனர். பிரமாண்ட ஒற்றை யானையை நேரில் பார்த்த பலர், ஆச்சர்யத்தில் மூழ்கி போயினர்.