/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் 20 கோவிலுக்குஅறங்காவலர் குழு நியமனம்
/
மாவட்டத்தில் 20 கோவிலுக்குஅறங்காவலர் குழு நியமனம்
ADDED : ஜூலை 17, 2024 02:24 AM
ஈரோடு;ஈரோட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில், மாவட்ட அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடந்தது.
உதவி ஆணையர் (பொறுப்பு) நந்தகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லாப்பாளையம் சிவகுமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் ஓடத்துறை சங்கிலி வீரப்பன், பெருமாள்பாளையம் புதுார் மாரியம்மன், அந்தியூர் பழனியாண்டவர், கருவல்வாடிப்புதுார் மாகாளியம்மன், பிரம்மதேசம் புதுார் பாண்டுரங்கநாதர், காமாட்சியம்மன், முகாசிபிடரியூர் பிராட்டியம்மன், மாதேசியம்மன், கெம்பநாயக்கன் பாளையம் பத்ரகாளி அம்மன், வீரபத்ர சோமேஸ்வரர், ஆலாத்துக்கோம்பை பத்ரகாளி அம்மன், குமிலம்பரப்பு விநாயகர், பள்ளிபாளையம் நாட்ராயசுவாமி, பவளத்தாம்பாளையம் மாரியம்மன், சூரம்பட்டி வலம்புரி விநாயகர், சூரியம்பாளையம் தெற்கு விநாயகர், மூங்கில் புதுார் கருப்பண்ணசுவாமி, ஊஞ்சலுார் பவளாயி அம்மன், மொடக்குறிச்சி மாரியம்மன் என, 20 கோவில்களுக்கு, பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டது.