ADDED : ஜூலை 17, 2024 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., ஈரோடு மாவட்டக்குழு சார்பில், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தார். கட்டுமானம், ஆட்டோ, தையல், அமைப்பு சாரா டிரைவர்கள், சுமை துாக்குவோர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த, 72 லட்சம் தொழிலாளர்களின் தரவுகளை மீட்டெடுத்து, பாதுகாக்க வேண்டும்.
ஆன்லைன் செயலி முழுமையாக செயல்படும் வரை, நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் கனகராஜ், கிருஷ்ணன், ஜெகநாதன், சேக்தாவூத், பொன்பாரதி, மாதவன், பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.