/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குருநாதசுவாமி கோவில் திருவிழா இன்று பூச்சாட்டுதலுடன் துவக்கம்
/
குருநாதசுவாமி கோவில் திருவிழா இன்று பூச்சாட்டுதலுடன் துவக்கம்
குருநாதசுவாமி கோவில் திருவிழா இன்று பூச்சாட்டுதலுடன் துவக்கம்
குருநாதசுவாமி கோவில் திருவிழா இன்று பூச்சாட்டுதலுடன் துவக்கம்
ADDED : ஜூலை 17, 2024 02:23 AM
அந்தியூர்;தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற, அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலின் நடப்பாண்டு ஆடி தேர்த்திருவிழா, இன்று காலை பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி தென்னிந்திய அளவில் கால்நடை சந்தை கூடும். கோவில் வளாகத்தில் நடக்கும் பூச்சாட்டுதலை தொடர்ந்து, 24ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. ஆக.,௭ம் தேதி முதல் வனபூஜையை அடுத்து, தேர்த்திருவிழா தொடங்குகிறது.
குருநாதசுவாமி, பெருமாள் சுவாமி, மகமேரு தேர்களிலும், காமாட்சியம்மன் சுவாமி பல்லக்கிலும், வனக்கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். அன்றைய நாளில் வனக்கோவிலில், குருநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடக்கும். தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தை ஆக., 8, 9, 10 தேதிகளில் நடக்கிறது. ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் உண்டு. ஆக., 14ம் தேதி பால் பூஜையுடன் ஆடித்திருவிழா நிறைவடைகிறது.