/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாய்ந்த நிலையில் கம்பம்: வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாய்ந்த நிலையில் கம்பம்: வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜூலை 14, 2024 03:07 AM
ஈரோடு: ஈரோடு-பெருந்துறை சாலையில், 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து உள்ளது. இதில் பழையபாளையத்தில் சாலை நடுவில் தெரு விளக்கு உள்ளது. இந்த கம்பம் சில தினங்களா-கவே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எந்த நேரத்திலும் விழலாம் என்ற நிலையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்-ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: பெருந்துறை சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வரு-கின்றன. இந்நிலையில் தான் சாலையின் நடுவே உள்ள தெரு விளக்கு கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. பலத்த காற்று வீசினாலோ அல்லது கன ரக வாகனம் லேசாக மோதி-னாலோ கூட கம்பம் சாய்ந்து வாகன ஓட்டிகள் மீது விழும் நிலை காணப்படுகிறது. சாய்ந்த நிலையில் உள்ள கம்பத்தை சரி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.