/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநில எல்லைகளில் 'நிபா' வைரஸ் சோதனை தீவிரம்
/
மாநில எல்லைகளில் 'நிபா' வைரஸ் சோதனை தீவிரம்
ADDED : ஜூலை 24, 2024 10:25 PM
ஈரோடு:கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 'நிபா' வைரஸ் பரவல் ஓரிரு இடங்களில் உள்ளது. அங்கு அவை கட்டுக்குள் இருந்தாலும், பிற மாநிலங்களுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவை ஒட்டிய கோவை, நீலகிரி மாவட்டமும், அதனை ஒட்டிய ஈரோடு மாவட்டமும், கர்நாடகா எல்லையில் உள்ள ஈரோடு மாவட்ட எல்லையான சத்தியமங்கலம், தாளவாடி, ஆசனுார், அந்தியூர், பர்கூர் போன்ற பகுதிகளிலும் வேலை உட்பட பல பணிகளுக்காக அதிக நபர்கள் வந்து செல்கின்றனர். இதனால், இப்பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுபற்றி, ஈரோடு மாவட்ட இணை இயக்குனர் - மருத்துவம், அம்பிகா சண்முகம் கூறியதாவது:
கொரோனாவை விட மிக வேகமாக 'நிபா' வைரஸ் பரவும் தன்மை கொண்டது. தமிழகத்தில் அதுபோன்ற பாதிப்பு இல்லை. கேரளாவில் ஒரு சிலருக்கு ஏற்பட்டாலும், அங்கு கடினமாக கண்காணிப்பதுடன், உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குகின்றனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை ஒட்டிய பகுதிகளில், அங்கிருந்து வருவோரால் பரவக்கூடாது என்பதில், தீவிரமாக கண்காணிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.