ADDED : ஜூலை 14, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் நவீன், 30; ஈரோட்டில் இருந்து காரில் வெள்ளக்கோவிலுக்கு நேற்று காலை சென்றார். கஸ்பாபேட்டை அசோகபுரம் அருகே, சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது மோதிய கார், ஒரு டூவீலர் மீது மோதி நின்றது. இருவரையும் மீட்டு ஈரோடு தாலுகா போலீசார், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சாலையை கடக்க முயன்று படுகாயமடைந்த வாலிபர் இறந்து விட்டது தெரிந்தது. அதேசமயம் டூவீலரில் வந்தது ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த குகன், 2௯, என தெரிந்தது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலி-யான வாலிபருக்கு, 35 வயது இருக்கும். யார்? எந்த ஊரை சேர்ந்-தவர் என்பது குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.