/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 395 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 395 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூலை 23, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கீடு, மகளிர் உரிமை திட்ட தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்-பாக, 395 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்-காக, அம்மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
'தமிழ்நாடு நாள்' விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவி-யருக்கான கட்டுரை, பேச்சு போட்டியில் முதல் மூன்று இடங்-களை பெற்றவர்களுக்கு தலா, 10,000 ரூபாய், 7,000 ரூபாய், 5,000 ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.