/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர்மட்டம் 70 அடியை தொட்டது
/
பவானிசாகர் நீர்மட்டம் 70 அடியை தொட்டது
ADDED : ஜூலை 16, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்-பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அணைக்கு நீர்-வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், 1,247 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 3,623 கன அடி-யாக, மாலையில், 6,326 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம், 70 அடியை எட்டியது. நீர் இருப்பு, 11 டி.எம்.சி. யாக இருந்தது. அணையில் இருந்து அரக்கன் கோட்-டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 500 கன அடி நீர்; காளிங்கராயன் பாசனத்துக்கு, 350 கன அடி; குடிநீர் தேவைக்காக, 155 கன அடி என, 1,005 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.