ADDED : ஆக 10, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சங்குநகர் சேரன் நகரை சேர்ந்தவர் வேம்பதுரை. இவரது வீட்டில்
நேற்றிரவு, 8:00 மணியளவில் ஒயரில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும்
நேரத்தில் சோபா, படுக்கையில் பரவியது. வீட்டில் இருந்தவர்கள்
அதிர்ச்சி அடைத்து வெளியே ஓடிவந்தனர்.
அப்பகுதி மக்கள் சேர்ந்து தீயை
அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து ஈரோடு தீயணைப்பு
துறையினர் சென்று, 15 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் சோபா,
படுக்கை எரிந்து விட்டது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது
தெரிந்தது.
