/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் கடையில் தாக்கப்பட்ட மேஸ்திரி சாவு: கபடி வீரர் கைது
/
டாஸ்மாக் கடையில் தாக்கப்பட்ட மேஸ்திரி சாவு: கபடி வீரர் கைது
டாஸ்மாக் கடையில் தாக்கப்பட்ட மேஸ்திரி சாவு: கபடி வீரர் கைது
டாஸ்மாக் கடையில் தாக்கப்பட்ட மேஸ்திரி சாவு: கபடி வீரர் கைது
ADDED : ஜூலை 16, 2024 01:34 AM
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தக-ராறில் கட்டையால் தாக்கப்பட்ட கட்டட மேஸ்திரி இறந்தார்.
இது தொடர்பாக கபடி வீரர் கைது செய்யப்பட்டார். எழுமாத்துார், அய்யகவுண்டன் பாளையம், வாய்க்கால் மேட்டை சேர்ந்தவர் சுந்தரவேல், 42, கட்டட மேஸ்திரி. கடந்த, 12ம் தேதி மாலை எழுமாத்துார் ஒயின்-ஷாப்பில் மது வாங்க வரிசையில் நின்றார். ஏற்கனவே வரிசையில் நின்று கொண்டிருந்த ஈரோடு, கோவில்பாளையம், மின்னபாளை-யத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியும், கபடி வீரருமான தேவராஜ், 42, இடையே வாய் தகராறு ஏற்பட்டது. கைகலப்பாக மாறியதில் அங்கு கிடந்த கட்டையை எடுத்து, சுந்தரவேலின் பின் தலையில் தேவராஜ் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சுந்தரவேல், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் இறந்தார். முன்-னதாக ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கபடி வீரர் தேவராஜை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்திருந்தனர். சுந்தரவேல் இறந்ததால் கொலை வழக்காக மாற்றம் செய்துள்-ளனர்.