ADDED : மே 31, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி, பச்சைமலை முருகன் கோவிலில், பூஜை பொருட்கள் விற்பனை, நெல்தீபம், எள் மற்றும் மிளகு பொட்டலம் விற்பனை, சிதறு தேங்காய் சேகரம் செய்து கொள்ளும் உரிமம், பிரசாத கடை உள்ளிட்ட இனங்களுக்கான ஏலம் நடந்தது.
இவை அனைத்தும், 7.91 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்தாண்டில் நடந்த ஏலத்தை ஒப்பிடுகையில், நான்கு லட்சம் ரூபாய் ஏலத்தொகை கூடுதலாக கிடைத்ததாக கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தெரிவித்தார்.

