/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சர்வோதய சங்க பணியாளர் தம்பதி வீட்டில் திருட்டு
/
சர்வோதய சங்க பணியாளர் தம்பதி வீட்டில் திருட்டு
ADDED : ஜூலை 05, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் அருகே சிவன்மலை, சரவணா நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 50; இவரின் மனைவி ஜெயலட்சுமி, 43; இருவரும் படியூர் சர்வோதய சங்க ஊழியர்கள். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றனர்.
மாலையில் வீட்டுக்கு வந்தபோது, முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது உள்ளே சென்று பார்த்ததில் பீரோ உடைக்கப்பட்டு, 3.5 பவுன் நகை, 57 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது. புகாரின்படி காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, களவாணிகளை தேடி வருகின்றனர்.