/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குரூப் 2, 2-ஏ தேர்வில் தேர்ச்சி பணி நியமன ஆணை வழங்கல்
/
குரூப் 2, 2-ஏ தேர்வில் தேர்ச்சி பணி நியமன ஆணை வழங்கல்
குரூப் 2, 2-ஏ தேர்வில் தேர்ச்சி பணி நியமன ஆணை வழங்கல்
குரூப் 2, 2-ஏ தேர்வில் தேர்ச்சி பணி நியமன ஆணை வழங்கல்
ADDED : ஜூலை 16, 2024 07:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குரூப் 2, 2-ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 மற்றும் 2-ஏ நேர்முகத்தேர்வு இல்லாத தேர்வுகளில் 19 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் நேரடி நியமன உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பணி நியமன ஆணையினை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.