/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனுமதியின்றி பட்டாசு விற்ற நபர் கைது
/
அனுமதியின்றி பட்டாசு விற்ற நபர் கைது
ADDED : அக் 20, 2025 09:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி விற்பனைக் காக பட்டாசு பாக்கெட்டுகள் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தீயணைப்பு நிலையம் அருகே வ.உ.சி., நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ஜெயக்குமார், 52; என்பவர் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக பட்டாசு பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து ஜெயக்குமாரை கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசு பாக்ஸ் மற்றும் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

