/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: மர்ம ஆசாமிகளுக்கு வலை
/
பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: மர்ம ஆசாமிகளுக்கு வலை
பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: மர்ம ஆசாமிகளுக்கு வலை
பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: மர்ம ஆசாமிகளுக்கு வலை
ADDED : அக் 20, 2025 09:27 PM
சங்கராபுரம்: பகண்டை கூட்ரோடு அருகே பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பகண்டை கூட்ரோடு அடுத்த அரியலுார் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் மனைவி கலைச்செல்வி, 30; இவர் எஸ்.குளத்துார் மும்முனை சந்திப்பு அருகே டீ கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 18 ம் தேதி இரவு 8.40 மணிக்கு கடையில் இருந்து தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார்.
கலைச்செல்வியை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் மூவர், அவரது கழுத்திலிருந்த 7 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றனர். உடன் கலைச்செல்வி அவர்களை தடுத்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.
இதனையடுத்து மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறிதது கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகள் மூன்று பேரை தேடி வருகின்றனர்.