/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பீனிக்ஸ் சூப்பர் மார்க்கெட் திட்டங்களில் பணம் இழந்தவர்கள் புகார் அளிக்கலாம் போலீசார் அறிவிப்பு
/
பீனிக்ஸ் சூப்பர் மார்க்கெட் திட்டங்களில் பணம் இழந்தவர்கள் புகார் அளிக்கலாம் போலீசார் அறிவிப்பு
பீனிக்ஸ் சூப்பர் மார்க்கெட் திட்டங்களில் பணம் இழந்தவர்கள் புகார் அளிக்கலாம் போலீசார் அறிவிப்பு
பீனிக்ஸ் சூப்பர் மார்க்கெட் திட்டங்களில் பணம் இழந்தவர்கள் புகார் அளிக்கலாம் போலீசார் அறிவிப்பு
ADDED : செப் 18, 2025 03:58 AM

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே பீனிக்ஸ் சூப்பர் மார்க்கெட் கவர்ச்சி திட்டங்கள் மூலம் பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மைக்கேல்புரத்தை சேர்ந்தவர் ஜான்கென்னடி, 49; இவர், கடந்த 2023 - 2024ம் ஆண்டு கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை மேல்சிறுவள்ளூர் கூட்ரோட்டில் பீனிக்ஸ் சூப்பர் மார்க்கெட் நடத்தினார்.
அப்போது, தங்க சேமிப்பு திட்டம், கார் மற்றும் நிலம் வாங்கும் திட்டம், மளிகை பொருட்கள் இரட்டிப்பு திட்டம், ஸ்டாக் பாயிண்ட் திட்டம், இரட்டிப்பு பணம் மற்றும் அதிக முதலீடு செய்தால் சிங்கப்பூர் செல்லும் திட்டம் உட்பட பல கவர்ச்சி திட்டங்கள் அறிவித்தார்.
அதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நபர்களிடம் பல லட்சம் பணம் பெற்று மோசடி செய்தார்.
இது தொடர்பாக விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ஜான்கென்னடியை கடந்த ஜன., மாதம் 31ம் தேதி கைது செய்தனர். சென்னையில் உள்ள தமிழ்நாடு வைப்பீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில், 26ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்க செய்ய வேண்டியுள்ளதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விழுப்புரம் மேற்கு சண்முகபுரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில், உரிய ஆவணங்களுடன் புகார் அளித்து வழக்கில் தங்களை இணைந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 04146-250366 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தெரிவித்துள்ளார்.