/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாலிபர் மர்ம மரணம் போலீஸ் விசாரணை
/
வாலிபர் மர்ம மரணம் போலீஸ் விசாரணை
ADDED : செப் 18, 2025 03:59 AM

திருக்கோவிலுார்,: விழுப்புரம், அய்யனம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி மகன் தேவா, 29; திருமணம் ஆகவில்லை. டி.என்.சி.எஸ்.சி., குடோன் லோடுமேன். இவர், திருக்கோவிலுார் - கண்டாச்சிபுரம் சாலையில், சு.பில்ராம்பட்டு அய்யனார் கோவில் பின்புறம் மரத்தில் நேற்று துாக்குப்போட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவ்வழியாக சென்றவர்கள் இறக்கி பார்த்தபோது, தேவா உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த அரகண்டநல்லுார் போலீசார் தேவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அரண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, தேவா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், திருமணமான பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளாக தேவா பழகி வந்ததாகவும், அப்பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்னையில், தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என, தெரியவந்துள்ளது.