/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செம்பொற்சோதிநாதருக்கு வெள்ளி கலச அலங்காரம்
/
செம்பொற்சோதிநாதருக்கு வெள்ளி கலச அலங்காரம்
ADDED : அக் 20, 2025 09:22 PM

கள்ளக்குறிச்சி: செம்பொற்சோதிநாதர் கோவிலில் மூலவர் சுவாமி வெள்ளி கலச நாக ஆபரணம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் பகுதியில் உள்ள திருநீற்றம்மை உடனுறை செம்பொற்சோதிநாதர் கோவிலில், கேதார கவுரி விரதத்தின் கடைசி நாள் மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று காலை 5.30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தம்பதியினருக்கு நல்ல இல்லற வாழ்க்கை அமைவதிற்காக, கேதார கவுரி விரதம் கடைபிடிக்கப்படு கிறது. இதற்காக, 21 நாட்கள் பெண்கள் விரதம் இருப்பர். கடந்த 1ம் தேதி துவங்கிய கேதார கவுரி விரதம் நேற்றுடன் முடிந்தது.
விரதம் நிறைவு நாள் மற்றும் தீபாவளி பண்டிகை என்பதாலும் மூலவர் செம்பொற்சோதிநாதருக்கு வெள்ளி கலச நாக ஆபரண அலங்காரம் அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

