/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாட்டுப் பொங்கலையொட்டி நந்திகேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
/
மாட்டுப் பொங்கலையொட்டி நந்திகேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
மாட்டுப் பொங்கலையொட்டி நந்திகேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
மாட்டுப் பொங்கலையொட்டி நந்திகேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
ADDED : ஜன 17, 2024 01:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்திகேஸ்வரர்க்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கடஸ்தாபனம், நந்திகேஸ்வர பெருமானுக்கு மகா அபிஷேகம், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
உற்சவமூர்த்தி சிவானந்தவள்ளி சமேத சந்திரசேகரர், நந்திகேஸ்வரர் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, வேத மந்திரங்கள் முழங்க நந்திகேஸ்வரருக்கு தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.