/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ADDED : ஜூலை 22, 2024 11:45 PM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சி,23வது வார்டு, சுக்லபாளையம் கோவிந்தன் குறுக்கு தெருவில், 25க்கும் மேற்பட்ட வீடுகளும், விநாயகர் கோவில் மற்றும் தெரு குழாய் அமைந்துள்ளது.
இப்பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மேன்ஹோல்' வழியாக வெளியேறும்கழிவுநீர், சாலையில் குட்டைபோல தேங்கி நிற்கிறது.
இதனால், இப்பகுதிவாசியினர் மட்டுமின்றி கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
தெரு குழாய் அருகில் கழிவுநீர் தேங்குவதால், குழாயடியில் குடம் வைத்து பிடிக்கும்போது குடிநீர் மாசடைந்து அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சுக்லபாளையம் கோவிந்தன் தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.