/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
/
வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : ஜூலை 23, 2024 11:27 PM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், எழிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட பனையூர் கிராமத்தில் வசித்துவரும் பழங்குடியினருக்கு, தலா 4.37 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆறு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலரும், கூடுதல் தலைமை செயலார் ககன்தீப் சிங் பேடி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைசெல்வியுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, கட்டுமான பொருட்களின் தரம் மற்றும் வீடுகளின் அளவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, மீதமுள்ள வீடுகளின் பணிகளை விரைந்து முடித்து, பயனாளிகளிடம் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வில், ஊராட்சித் துறை கூடுதல் இயக்குனர் குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.