/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்கள் சேவையில் போலீசார் காஞ்சியில் விழிப்புணர்வு போஸ்டர்
/
மக்கள் சேவையில் போலீசார் காஞ்சியில் விழிப்புணர்வு போஸ்டர்
மக்கள் சேவையில் போலீசார் காஞ்சியில் விழிப்புணர்வு போஸ்டர்
மக்கள் சேவையில் போலீசார் காஞ்சியில் விழிப்புணர்வு போஸ்டர்
ADDED : ஜூன் 22, 2024 11:32 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், காவல்துறை, பி-3 காஞ்சி தாலுகா போலீஸ் நிலையம், பொதுமக்களுக்கு காவல் துறையின்விழிப்புணர்வு வேண்டுகோள், உங்கள் குடியிருப்பு பகுதி, கடைகள் மற்றும் வீடுகளுக்கு பாதுகாப்புக்காக கட்டாயம் சி.சி.டி.வி., எனப்படும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். வீட்டை பூட்டிவிட்டு ஊரக்கு செல்வதாக இருந்தால் பாதுகாப்பிற்காக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது கூடுதலாக பாதுகாப்பிற்கு செயின் பூட்டு போட்டு வைக்கவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் மற்றும் பணத்தை வங்கி லாக்கரில்வைக்கவும்.
செயின் பறிப்பு குற்றவாளிகளிடமிருந்து உங்கள் நகைகளை பாதுகாத்துக் கொள்ளவும். வேலையாட்கள் பற்றிய விபரங்களை போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கவும்.
மொபைல்போன் பறிப்பு குற்றவாளிகளிடமிருந்து உங்கள் மொபைல்போனை பாதுகாத்துகொள்ளவும்.
இணையதள குற்றவாளிகளிடம் உங்களுடைய வங்கி விபரங்கள் ஓ.டி.டி., விபரங்களை தெரிவிக்க வேண்டாம்.
வீட்டில் தனியாக உள்ள முதியவர்கள் பற்றிய விபரங்களை காவல் நிலையத்திற்கு தெரிவிக்கவும். அவர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் கண்காணிப்பார்கள்.
மேலும், பி-3 தாலுகா போலீஸ் நிலையம் மொபைல் எண், 94981 00271, சைபர் கிரைம் புகார் எண் 1930, பொதுமக்கள் சேவையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை என குறிப்பிடப்பட்டுள்ளது.